அண்மைய செய்திகள்

recent
-

வீடியோ குறித்து தொடரும் சர்ச்சை! தடவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை -


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாக சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்று வெளியாகியுள்ள வீடியோ தொடர்பில் சர்ச்சைகள் நீடித்துள்ளன.
இந்நிலையில், குறித்த வீடியோவை வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க வின் உறுப்பினர் வைத்தியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் தருனத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு சில நிமிடங்களே உள்ளடக்கி வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

இது அரசியல் உள்நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் வைத்து செய்ய கூடிய செயலாகவே இதை நான் கருதுகிறேன்.
75 நாட்கள் சிகிச்கையின் போது வெளியிடப்படாத ஒரு வீடியோ, ஜெயலலிதா உயிரிழந்து ஒரு வருடம் கழித்த பின்னர் வெளியிடப்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இதுதொடர்பாக தடயவியல் துறையின் மூலம் விசாரணை நடத்தப்படவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது அது எந்த திகதியில் எடுக்கப்பட்டது மற்றும் அதன் உண்மை தன்மையும் தெரிய வரும்.
எவ்வாறாயினும், குறித்த வீடியோ ஆ.கே நகர் தேர்தலை இலக்காக வைத்து வெளியடப்பட்டது என்பது தெரியவருகிறது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video..

வீடியோ குறித்து தொடரும் சர்ச்சை! தடவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை - Reviewed by Author on December 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.