மகிமையின் பேரொளி.....மனித குலத்தின் விடிவெள்ளி....
மார்கழி மாதத்திலே
மனம் குதுகலித்ததே
மகிமையின் பேரொளி
மனித குலத்தின் விடிவெள்ளி
மரியன்னையின் கனியே
மானிடரை மீட்க வந்தாய் தனியே
மனங்களில் நீ பிறந்தால் துன்பமெல்லாம் பனியே
மட்டற்ற மகிழ்ச்சி மனங்களில் பவனியே
ஆடையலங்காரத்திலும்
அறுசுவை விருந்திலும்
அட்டகாசமாய் பட்டாசு கொளுத்துவதிலும்
ஆனாந்தம் கொள்வது மட்டுமல்ல
அன்பும் கருணையும்
அயலவருடனும் குடும்பத்திலும்
அனைவரிடமும் சமத்துவமும் சமாதானமும்
அழகான வாழ்வின் அடையாளமே-இயேசு பாலன் பிறப்பு
இதயம் தனிலே
இருள் விலகிடும்
இல்லங்களில் இறையருள் பெருகிடும்
இயேசு பாலகன் பிறப்பினாலே
மரியன்னையின் மகத்துவமே
ம்னிதவுருவெடுத்த இயேசு பாலகனே
மனங்களில் பிறக்கட்டுமே....
மனிதம் சிறக்கட்டுமே....
இளம் கவிஞர்
-வை.கஜேந்திரன் -
மகிமையின் பேரொளி.....மனித குலத்தின் விடிவெள்ளி....
Reviewed by Author
on
December 25, 2017
Rating:

No comments:
Post a Comment