அண்மைய செய்திகள்

recent
-

புனித செபஸ்த்தியார் பேராலயத்தில் இயேசுகிறிஸ்த்து பிறப்பு விழா.....


கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு பங்கு தந்தை அருட்பணி க.யோஸ் பெப்பி சோசை அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் நல்லிரவு வேளையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அருட்தந்தையர்களுடன் இணைந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் திருப்பலி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றுகையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

கிறிஸ்து பிறப்பின் விழாவானது எம் ஒவொருவருக்கும் அன்பின் மகிழ்ச்சியான தினமாக இருக்கின்றது. இறைவன் எம்மை தனது மக்களாக நினைத்து நாம் சிதறி போகக்கூடாது என நினைத்து தனது மகனை மனித உருவெடுத்து பிறப்பதற்கு சித்தம் கொண்டிருந்தார்.

இந்தவகையிலே கிறிஸ்து இயேசுவின் பிறப்பை நாம் பார்க்கின்றோம். இதற்கு நாம் முதலில் இறைவனுக்கு நன்றிகூற வேண்டும். இருளில் உள்ள மக்கள் பேரொளியைக் கண்டார்கள் என்ற இறைவாக்கினரின் வார்த்தைக்கு அமைய நாமும் ஒரு பேரொளியைக் கண்டுள்ளோம்.
பாவமும் சாவும் எம்மை ஆட்கொள்ளாவண்ணம் அவற்றை மீட்பதற்காக இயேசு எமக்கு தரப்பட்டுள்ளார் வருகை தந்துள்ளார். இது அவரின் உத்தானத்தின் மூலம் எமக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் வரலாற்று உண்மையாக இருந்தாலும் இது இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றது.
.
.
திருத்தந்தை பிரான்சீஸ் தனது செய்தியில் கிறிஸ்து பிறப்பு விழாவில் எல்லோரும் மகிழ்வு கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் துர்வஷ;டமாக இறைவனை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு ஏழை எளியவர்களை திசைதிருப்பி கொண்டாட்டம் கொண்டாடுகின்றார்களே இது தனக்கு கவலையை உண்டுபண்ணியுள்ளது என்றார்
.
ஆகவே கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் கொண்டாடும்போது ஆன்மீக திருப்தியை தருகின்றது. ஆன்மீக மகிழ்ச்சியை தருகின்றது ஆன்மீக நம்பிக்கையை தருகின்றது. என்ற இந்த சிந்தனையுடன் நாம் இவ் விழாவை கொண்டாடுகின்றோம் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.

 















புனித செபஸ்த்தியார் பேராலயத்தில் இயேசுகிறிஸ்த்து பிறப்பு விழா..... Reviewed by Author on December 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.