அண்மைய செய்திகள்

recent
-

மார்கழி சுபகாரியங்களுக்கு ஏற்றதா?


மார்கழி பிறந்தால் இல்லற வாழ்வில் இருப்பவர்கள் எவ்வித சுபகாரியங்களையும் செய்யமாட்டார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மார்கழி சுபகாரியங்களுக்கு ஏற்றதா?
கேள்வி: மார்கழி பிறந்தால் இல்லற வாழ்வில் இருப்பவர்கள் எவ்வித சுபகாரியங்களையும் செய்யமாட்டார்கள். ஆனால், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கோ மார்கழி மிக முக்கியமான காலம், ஏன் இப்படி? என்ன தான் நடக்கிறது மார்கழியில்?

சத்குரு: ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு வருடத்தின் இந்த நேரம், அதாவது மார்கழி மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மார்கழி மாதம், டிசம்பர் 15ம் தேதி வாக்கில் துவங்குகிறது. வருடத்தின் இந்நேரத்தில் பூமி, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது, பூமியின் வடபாகம் மிக உஷ்ணமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால், பூமியின் வடக்கு முகம் சூரியனைப் பார்த்து இல்லாமல், எதிர்ப்புறமாகத் திரும்பி இருப்பதாலும், இத்தனை நெருக்கத்தில் சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் கோணம் விரிந்திருப்பதாலும், பூமியின் இப்பகுதிக்கு வெப்பக் கதிர்கள் வந்து சேர்வதில்லை.

பூமி இன்னும் சற்று விலகியிருந்திருந்தால் இந்த நிலைமாறி, சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடைந்திருக்கும். ஆனால், இப்போது வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடையாது; நாம் வாழும் பகுதி மிகக்குளிராக இருக்கிறது.

இம்மாதம் மிகக் குளிராக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்நேரத்தில் நாம் சூரியனுக்கு மிக அன்மையில் இருக்கிறோம் என்பதால், சூரியனின் ஈர்ப்பு விசை மற்ற எல்லா நேரங்களையும் விட இந்நேரத்தில் நம்மீது மிக அதிகமாகச் செயல்படுகிறது. இது நம் சக்தியைக் கீழிருந்து இழுப்பதால், நம் உடலிற்கு சமநிலையும், ஸ்திரத்தன்மையும் கொண்டு வருவதற்கு இது ஏற்ற நேரம். யோக மரபில் இதற்காக வடிவமைக்கப்பட்ட நிறைய செயல் முறைகள் நம் கலாச்சாரத்தில் பல விதங்களில் வழங்கப்பட்டன.

இந்தச் சமயத்தில், பொதுவாக பெண்கள் செய்வனவற்றை ஆண்களும், ஆண்கள் செய்வனவற்றை பெண்களும் செய்கிறார்கள். இதைச் சற்றே கூர்ந்து கவனித்தால், ஒரு பொருளைப் பார்க்கும் போது, பெண்தன்மை அப்பொருளின் உருவம் மற்றும் நிறத்திற்கும், ஆண் தன்மை அப்பொருளின் வடிவியலுக்குமே முக்கியத்துவம் தரும்.

உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.

கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.



இந்த நேரத்தில் ஒரு விதையை விதைத்தால், அது அத்தனை வேகமாய் வளராது. உயிர் சக்தியில் இருக்கும் ஒரு வித சடத்துவ தன்மை (வீஸீமீக்ஷீtவீணீ), வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதால்... உடல் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், தன் தற்காப்புப் பணிகளில் ஈடுபடவும் இது சரியான நேரம். இதை உணர்ந்திருந்ததால் தான் இன்றளவிலும் தமிழ்நாட்டில், மார்கழி மாதத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில்லை. அதே போல் கருவுருவதற்கும் இது ஏற்ற சமயமல்ல. அதனால் தான் திருமணமானவர்கள் கூட இந்தச் சமயத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பார்கள்.

சூரியனின் ஈர்ப்பு விசை கீழிருந்து இழுப்பதால், மனநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும், இது தங்களைச் சமன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நேரம். நம் உடல் 72% நீரால் ஆனது. எப்போது இந்த நீர் கட்டுக்குள் அடங்காமல் செயல் படுகிறதோ, அப்போது நம் மனநிலை பாதிக்கப்படும் என்கிறது யோக மரபு.

ஒரு சிறு தொட்டியில் நீரைத் தேக்கி, அத்தொட்டியைச் சற்றே அசைத்தால், உள்ளிருக்கும் நீர் தளும்பி எல்லாத்திக்கிலும் சலசலப்பை ஏற்படுத்தும். அதே போல்தான், நம் உடலில் இருக்கும் நீரை சரியான வகையில் நடத்திக் கொள்ளாவிட்டால், அது நம் மனநிலையில் பல தரப்பட்ட பாதிப்பையும் உண்டாக்கும்.

இந்த மாதத்தில் நீரோடு தொடர்பில் இருப்பதற்குப் பல செயல் முறைகளை உருவாக்கினோம். பொதுவாக, இம்மாதத்தில் யாரும் பிரம்ம முகூர்த்தத்தைத் (காலை 3.40 மணி) தவறவிட விரும்புவதில்லை. மக்கள் கடைபிடிப்பனவற்றுள் மிக எளிய ஒன்று, பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி நீராடுவது.

மார்கழி மாதம் இயல்பாகவே நம் உடலில் ஒரு ஸ்திர நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலான ஆன்மீக சாதகர்கள், இன்று ஒரு அடி முன்னே வைத்தால், நாளையே ஒரு அடி பின் வைப்பது என்று முன்னும் பின்னும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஏனெனில், தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள போதுமான ஆன்மீகப் பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. உங்களுக்குள் ஸ்திரமாக இல்லாத போது, உங்கள் சக்திமேல் நோக்கி இழுக்கப்பட்டால், அது உங்களில் ஒரு சமனற்ற நிலையை உண்டாக்கும். அதனால் இந்த மார்கழி மாதம் ஸ்திரத்தை வளர்த்துக் கொள்வதற்கும், அடுத்து வரும் தை மாதம் வேகமாய் முன்னேறிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்குள் நீங்கள் திடமாக இருந்தால்தான், இன்னும் மேல் நோக்கிச் செல்ல உங்களுக்குத் துணிவு வரும். மார்கழி மாதம் உங்களுக்குள் ஒரு சமநிலையும் ஸ்திரமும் உருவாக்கிக் கொள்ளும் நேரம்.

மார்கழி சுபகாரியங்களுக்கு ஏற்றதா? Reviewed by Author on December 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.