நெஞ்சு பகுதியில் வலியுடன் இந்த அறிகுறிகள் உள்ளதா?
பேனிக் அட்டாக் என்பது நம் உடலில் அட்ரினலின் அளவு திடீரென அதிகமாக உயரும் போது மாரடைப்பு போன்றே நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படுவதுடன், சில அறிகுறிகளும் தோன்றிடும்.
ஆனால் பொதுவாக இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் தென்படும்.
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்?
- மாரடைப்பு வருவதாக இருந்தால் மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
- சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்ற உணர்வு அதிகரிக்கும்.
- மாரடைப்பு ஏற்பட்டால் பொதுவாக நடு நெஞ்சில் வலி ஏற்படும்.
- இடது கை, தோல்பட்டை மற்றும் முதுகு ஆகிய பகுதியில் வலி உண்டாகும்.
- சிலருக்கு பற்கள், தாடை பகுதியிலும் வலி இருக்கும். ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான வலி இருக்காது.
- நெஞ்சு வலி எடுத்தவுடன் அதிகமாக வியர்க்கும், குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
பேனிக் அட்டாக்கின் அறிகுறிகள்?
- பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கும், பேனிக் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம்.
- மார்பில் வலி ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி வலதுபக்கம், விரல்கள் கால் ஆகியவற்றில் ஏற்பட்டு மயக்கம் வருவது போலத் தோன்றும்.
நெஞ்சுவலியை தடுக்க என்ன செய்யலாம்?
- நெஞ்சில் வலி ஏற்படாமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
- உடல் எடையைக் குறைக்க வேண்டும், அதனால் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- அரிசி மற்றும் சர்க்கரையை குறைத்துக் கொண்டு, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
- சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்க வேண்டும்.
- புகை மற்றும் மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து, தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நெஞ்சு பகுதியில் வலியுடன் இந்த அறிகுறிகள் உள்ளதா?
Reviewed by Author
on
December 17, 2017
Rating:
Reviewed by Author
on
December 17, 2017
Rating:


No comments:
Post a Comment