மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
பங்காகிய பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு புதன் கிழமை 29.11.2017-பங்குத் தந்தை அருட்பணியாளர் அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளார் தலைமையில் உதவி பங்குத் தந்தை அருட்பணியாளர் P.ஜோண் ஸ்ரானின் சோசை அடிகளார் மற்றும் போதகராக வருகை தந்திருந்த அருட்பணி யூட் குரூஸ் அடிகளார் உட்பட பங்கு மக்கள் மத்தியில் பங்குத் தந்தை ஆலய மற்றும் பாப்பரசரின் கொடிகளை ஏற்றி திருவிழாஆரம்பமானது.
 அதனைத்தொடர்ந்து 09நவநாள் வழிபாடும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்று இன்று 08 -12- 2017 காலை 5-30மணிக்கு  திருவிழாத்திருப்பலியும்  காலை 7-15 மணிக்கு திருவிழா சிறப்புத்திருப்பலியும் ,இடம்பெற்றதோடு வெற்றி அன்னையவள்  பக்தர்கள் படைசூழ  மணிகள் ஒலிக்க பட்டாசு முழங்க உள்ளகவீதி உலாவந்து தனது இறைபிள்ளைகளுக்கு இறையாசி வழங்கினாள்
மக்களின் கரவொலிகளுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.
மக்களின் கரவொலிகளுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் விழா இனிதே நிறைவுற்றது.
-வை.கஜேந்திரன்-

மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
 
        Reviewed by Author
        on 
        
December 08, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 08, 2017
 
        Rating: 








































No comments:
Post a Comment