சூடு பிடிக்கும் தேர்தல்களம் : அதிரடி முடிவெடுத்த கஜேந்திரகுமார்
உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்கும் இடையில் உடன்பாடு ஏற்படாமற்போனதையிட்டு இருவரும் தத்தமது அணிகளைப் பலப்படுத்தும் செயற்திட்டங்களில் இறங்கியுள்ளனர். தனியாகப் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்த தமிழ்க் காங்கிரசினர், சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூட்டணி அறிவிப்பிற்குப் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதாக அறியமுடிகிறது.
களத்தில் நிற்கும் எதிர்த்தரப்புக்கு சவால் அளிக்கக்கூடிய கூட்டு ஒன்றை உருவாக்கும் நோக்கில் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்த கஜேந்திரகுமார் அவர்கள் தனது தலைமையிலான இரு கட்சிகளையும் புதிய கூட்டாக அறிவித்து அக்கூட்டுக்கு தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையில் மேலதிகமாக தமிழர் சம உரிமை இயக்கமும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புக்களுக்கும் கஜேந்திரகுமார் அவர்கள் தலைமைப்பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறித் தமிழரசுக் கட்சி தனித்துவிடப்படும் சூழ்நிலையில் இதே வழியைப் பின்பற்றி தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
அகில இலங்கைதமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசியமக்கள் முன்னணி,தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
முன்னுரை
தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக
இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால்
முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட
அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு
உருவாக்கப்படுகின்றது.
1. பெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. .(TamilNational Council–T.N.C.)
2. இலக்கு: மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையினால்
10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ்
மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும்
இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.*
3. எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில்
பொதுச்சின்னத்தைபெறமுடியாதநிலைஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்
4. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும்
பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதியசின்னம் பெறப்பட்டுமேற்படி
இலக்கைஅடைவதற்காக செயற்படும்.*
5. இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொதுஅமைப்புக்கள் தமதுசுயாதீனத்தைபேணிக்கொள்ளமுடியும்.
மேற்படிவிடயங்களை வாசித்து விளங்கிக்கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டுடி சம்பர்மாதம்
06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும்
அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.
அகில இலங்கைதமிழ் காங்கிரஸ்
தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
தமிழர் சம உரிமை இயக்கம்
மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும்
இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
சூடு பிடிக்கும் தேர்தல்களம் : அதிரடி முடிவெடுத்த கஜேந்திரகுமார்
Reviewed by Author
on
December 08, 2017
Rating:
Reviewed by Author
on
December 08, 2017
Rating:


No comments:
Post a Comment