தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்
கிழக்கில் இருந்து கடற்காற்று நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் வருகிற 31-ந்தேதிக்குள் முடியும். சில வருடங்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு போகும். இந்த வருடம் வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்துள்ளது. இன்னும் மழை காலம் முடியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இரவிலும், அதிகாலையிலும் உள்ளது.
சில இடங்களில் காலை 9 மணி வரை கூட பனி பெய்கிறது. தூரத்தில் யார் வருகிறார் என்று தெரியாத அளவுக்கு பனி புகை போல் உள்ளது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கிழக்கில் இருந்து கடற்காற்று நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்
Reviewed by Author
on
December 18, 2017
Rating:

No comments:
Post a Comment