102 மொழிகளில் பாடல்களை பாடி மாணவி ஒருவர் கின்னஸ் சாதனை! -
டுபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கனவே ஹிந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் உண்டு.
இவர் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு ஆங்கில மொழி பாடல்களை பாடி ஏராளமான பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.
சுதேசா 4 வயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்று வருகிறார். இதுவரை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடியதே கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சுதேசா பயிற்சி எடுத்து வந்தார். தற்போது 102 மொழி பாடல்களை கற்றுக்கொண்டு அந்த மொழியின் தன்மை மாறாமல் அச்சு அசலாக பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
இதனை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் வகையில் நேற்று முன்தினம் மாலை டுபாயில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதேசா 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார்.
கின்னஸ் நிறுவன அதிகாரிகள் சுதேசாவின் திறமையை பாராட்டி உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிக மொழிகளில் பாடியவர் என்ற சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய துணைத்தூதர் விபுல், சுதேசாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்ட மாணவி சுதேசா கூறுகையில், 2 மணி நேரத்தில் ஒரு மொழி பாடலை கற்றுக்கொண்டு விடுவேன். சிறிய பாடலாக இருந்தால் 1½ மணி நேரத்தில் கற்றுக்கொண்டு விடுவேன் என்றார்.
மாணவி சுதேசா ஏற்கனவே டுபாய் அரசு சார்பில் சிறந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் ஹேக் ஹம்தான் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
102 மொழிகளில் பாடல்களை பாடி மாணவி ஒருவர் கின்னஸ் சாதனை! -
Reviewed by Author
on
January 27, 2018
Rating:
Reviewed by Author
on
January 27, 2018
Rating:


No comments:
Post a Comment