தேர்தல் கால பரபரப்புக்காகவே இலஞ்ச குற்றச் சாட்டு... சாள்ஸ் நிர்மலநாதன்
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் எங்கள் மக்களுடைய அரசியல் ரீதியான நகர்வுக்காக முழுமையாக செயல் பட்டு கொண்டிருக்கும் ஒரு இயக்கம்.
அந்த வகையில் மக்களுக்கு துரோகம் செய்கின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலஞ்சம் வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. மேலும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கருத்து பொய்யாக இருக்கின்ற பட்சத்தில் அவர் அதற்கு மாற்றீடாக என்ன செய்வார்?
இலஞ்சம் வாங்கியதை அவரினால் நிரூபித்து காட்ட முடியுமா? என்பது தான் தற்போதைய கேள்வி.
தேர்தல் காலத்தில் பொய்ப் பிரச்சாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் மக்கள் மத்தியில் முன் வைப்பதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கால பரபரப்புக்காகவே இலஞ்ச குற்றச் சாட்டு... சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by Author
on
January 27, 2018
Rating:

No comments:
Post a Comment