2000 வருடங்களுக்கு முன்னர் பண்டைய தமிழர்களின் நாட்காட்டி மீண்டும் கிளிநொச்சியில்.. -
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய நாட்காட்டியை தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா என்ற தமிழரே இந்த நாட்காட்டியை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்களின் சிறப்பு மிக்க நாட்கள், நினைவுகூரப்பட வேண்டிய தமிழர் சரித்திரங்கள், மனிதர்கள், உலக நிகழ்வுகள் என்பவற்றை இந்த நாட்காட்டி தாங்கியிருக்கின்றது.
இந்த நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரராசா, தனது தனிப்பட்ட முயற்சியாக தமிழர் நாட்டிகாட்டியை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்காட்டியில் தமிழ் பண்பாட்டில் முக்கியமான நாட்கள் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான நிகழ்வுகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழர் புத்தாண்டான தை முதல் நாளுடன் தொடங்கும் இந்த நாட்காட்டியில் தமிழ் மாதங்கள், தமிழர்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்திய இலக்கங்கள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தமிழ் இலக்கங்களை அறிந்து கொள்ளும் விதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
2000 வருடங்களுக்கு முன்னர் பண்டைய தமிழர்களின் நாட்காட்டி மீண்டும் கிளிநொச்சியில்.. -
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment