ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் வீரர்கள்! -
ஈழத் தமிழ் மக்களுக்கான பெருமையின் அடையாளமாக இன்றைய இளம் சமூகத்தினர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்கள். போட்டிக்கும் மத்தியில் தங்களின் தனித் திறமைகளை அடையாளப்படுத்தி, தங்களின் தாய்த் தேசத்திற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.இம்மாதம் 14 நியூசிலாந்தில் நடைபெற இருக்கின்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா அணியில் 3 ஈழத்தமிழர்கள் விளையாட இருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில், காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய வீரர்கள் களமிறங்குகிறார்கள்.சிறந்த துடுப்பாட்ட வீரனாக காவியன் நரேஸ் களமிறங்குவதுடன், சுழல் பந்து வீச்சாளராக சாமுவேல் கிரிசானும், விக்கெட் காப்பாளராக ஏரன் பத்மநாதன் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் கனடா அணிக்கு பலம் சேர்க்கிறார்கள் இவர்கள்.
இந்தப் போட்டியில் முதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து பங்காளதேசம் மற்றும் நமிபியா அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, உலகத் தமிழ் மக்களின் பெருமையை இந்த வீரர்கள் நிலைநாட்டுவதற்கு உலகத் தமிழ் மக்கள் வாழ்த்துகின்றார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் வீரர்கள்! -
Reviewed by Author
on
January 02, 2018
Rating:
Reviewed by Author
on
January 02, 2018
Rating:


No comments:
Post a Comment