தாயக உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!
அப்படி உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் ஏராளம். இவ்வாறு இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் தமிழரான செந்தில் குமரன் அவர்கள் உதவிகளை செய்து வருகின்றார்.
அந்த வகையில், பாடகரான செந்தில் குமரன் இசை நிகழ்ச்சி மூலமாகவும், பொது மக்களிடம் இருந்தும், நன்கொடைகள் மூலமாகவும் நிதி சேகரித்து கொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்திசாலையின் ஊடாக இலவச சிகிச்சைகளை வழங்கி வருகின்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வரையில் சுமார் 28 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள செந்தில் குமரன் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல நிவாரண திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.
இதன்படி, இந்த மாத இறுதிப்பகுதியில் 10 நோயாளிகளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு 7 பேருக்கு வெற்றிகரமாக சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளன. இறுதி மூன்று பேருக்கு விரைவில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இதுவரையிலும் சிகிச்சை பெற்ற பயனாளிகள் அனைவரையும், குறித்த வைத்தியசாலையில் வைத்து அண்மையில் செந்தில் குமரன் அவர்கள் சந்தித்திருந்தார்.
தாயக உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!
Reviewed by Author
on
January 27, 2018
Rating:

No comments:
Post a Comment