வட மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -
வெற்றிடமாக இருந்த வட மாகாணசபையின் இரு உறுப்பினர்கள் பதவிக்கு சபாரத்தினம் குகதாஸ் மற்றும் அப்துல் நியாஸ் சீனி மொஹமட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மொஹமட் ரயீஸ் ஆகியோர் பதவி விலகியதையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனம் தொடர்பான அறிவித்தலை வட மாகாணசபையின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வட மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னல்ட் பதவி விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சபாரத்தினம் குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு உறுப்பினரான மொஹமட் ரயீஸ் பதவி விலயகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அப்துல் நியாஸ் சீனி மொஹமட் என்பவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், சபாரத்தினம் குகதாஸ் நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.
வட மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -
Reviewed by Author
on
January 27, 2018
Rating:

No comments:
Post a Comment