உலகெங்கிலும் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
உலகெங்கிலும் வாழும் எமது நியூமன்னார் வாசகர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் உவகை தரும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
ஓங்கட்டும் ஒற்றுமை
ஒளியட்டும் வேற்றுமை
ஒன்றித்து வாழ
ஓரணியில் இணைவோம்....
விந்தை உலகை வெல்ல
நல் சிந்தையால் இணைவோம்
அல்லும் பகலும் உழைத்து
அயலவருடன் மகிழ்ந்து
அன்பு பண்பு பாசம் நேசம் கொண்டு
அனைவரும் ஆனந்தமாய்- என்
நாளும் நட்புடன்
நலமாய் வாழ்ந்திடுவோம்
நானிலம் போற்றிட
நன்மக்களாய்-நன்நெறியில்
நவீனம் கடந்தும் காப்போம்
நாகரீகம் தமிழர்களாய்.....
இந்த மனம்
இனி நந்தவனம்
இவ்வுலகில் மூத்த இனம்
இந்த வருடம் தரும் தனம்
இனிமையாக வீசும் தமிழ் மணம்
உள்ளத்திலும்
உங்கள் இல்லத்திலும்
உன்னதமாய் ஒளி தரும்
உல்லாசமாய் பிற்க்கட்டும் புத்தாண்டு
சிறக்கட்டும் வாழ்க்கை தேன்சுவை கற்கண்டு
நியூமன்னார் இணையத்திற்காக
கவிஞர் வை.கஜேந்திரன்-
உலகெங்கிலும் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
Reviewed by Author
on
January 01, 2018
Rating:
Reviewed by Author
on
January 01, 2018
Rating:



No comments:
Post a Comment