குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்
69-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார்.
நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நடக்க உள்ளது. மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து, கவர்னர் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கவர்னரை வரவேற்றனர். இதனை அடுத்து, அவர் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பல்வேறு துறைகளின் சார்பில் இடம்பெற்றுள்ள கண்காட்சி அணிவகுப்பை அவர் பார்வையிட உள்ளார்.
குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்
Reviewed by Author
on
January 26, 2018
Rating:

No comments:
Post a Comment