சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை! -
இதனால் நம் உடல் ஆரோக்கியம் முழுவதும் முடங்கி விடும்.
சிறுநீரகக் கற்கள் எதனால் உண்டாகிறது?
பரம்பரைக் கோளாறுகள், தைராய்டு சுரப்பிகள், உடலில் அதிகப்படியாக சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகள் ஆகிய காரணத்தினால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது.சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறிகள்?
- அடி வயிற்றில் அடிக்கடி வலி ஏற்படும்.
- முதுகில் திடீரென வலி ஏற்படும்.
- இடுப்பின் முன்பக்கத்தில் வலி ஏற்படும்.
- சிறுநீர் ரத்தம் கலந்து வெளியேறும்.
சிறுநீரக் கற்களை கரைக்கும் மூலிகை எது?
சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்க, யானை வணங்கி எனும் பெரு நெருஞ்சில் மூலிகை ஆகும். இந்த பெரு நெருஞ்சில் செடியின் வேர்களை நன்கு சுத்தம் செய்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின் அந்த நீரை குடித்து வர வேண்டும்.இதனால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் நொறுங்கி, துகளாக அல்லது கரைந்து சிறுநீரின் வழியே வெளியில் வந்துவிடும்.
மற்றொரு முறை
நெருஞ்சி வேர்களுடன், சிறிது கொத்தமல்லி அல்லது கீழாநெல்லி ஆகியவற்றை நீரில் கலந்து நன்கு காய்ச்சி, அந்நீரை குடித்து வந்தால், சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.கவனத்தில் கொள்ள வேண்டியவை?
மேற்கூறப்பட்ட மூலிகை தேநீரை பருகும் வேளையில், சீரற்ற வடிவில் உள்ள சிறுநீரகக் கற்கள் உடைந்து சிறுநீருடன் கலந்து வரும் நிலையில், சிறுநீரகப் பாதையில் ரத்தப்போக்கு ஏற்படலாம். அதற்கு அதிக அளவில் தண்ணீர், இளநீர் அல்லது நுங்கு சாப்பிடலாம்.சிறுநீரக் கற்கள் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை?
சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பரங்கிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் புதினாக் கீரைகள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.தவிர்க்க வேண்டியவை?
சிறுநீரக் பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், காபி அல்லது டீ, பருப்பு வகைகள், சாக்லேட் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை! -
Reviewed by Author
on
January 28, 2018
Rating:

No comments:
Post a Comment