அண்மைய செய்திகள்

recent
-

1000000 லட்சம் பேருக்கு குடியுரிமை...கனடா அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!


அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2018ஆம் ஆண்டு 3,10,000 பேர் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,30,000 பேரும், 2020ஆம் ஆண்டில் 3,40,000 பேரும் குடியேற்றப்படவுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிதானியா போன்ற நாடுகள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1000000 லட்சம் பேருக்கு குடியுரிமை...கனடா அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! Reviewed by Author on January 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.