மன்-நானாட்டான் ம.வி மாணவன் தேசிய மட்டதில் சாதனை....படம்
கல்வி அமைச்சின் அனுசணையில் அகில இலங்கை ரீதியில் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவு சம்மேளனம் ஆகியவை இணைந்து நடாத்திய மாணவர்களுக்கிடையிலான கட்டுரை போட்டியில் மன்னார் நானாட்டான் ம.வி மாணவன் ச.பிரியதர்சன் குரூஸ் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தை பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு விருது வழங்கும் வைபவமானது நேற்று 20-01-2018 சனிக்கிழமை கொழும்பு தாமரை தடாக திரையரங்கில் சுகாதார அமைச்சர் .ரஜித சேனரத்ன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டு இம் மாணவனுக்கு விருது, சான்றிதழ் மற்றும் பணப்பரிசில் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த இம்மாணவனுக்கும் இம்மாணவனை பயிற்றுவித்த ஆசிரியர் அதிபர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

மன்-நானாட்டான் ம.வி மாணவன் தேசிய மட்டதில் சாதனை....படம்
Reviewed by Author
on
January 21, 2018
Rating:

No comments:
Post a Comment