மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புகை மண்டலம்-மக்கள் பாதிப்பு-(படம்)
மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மீது தீப்பரவல் ஏற்பட்டமையினால் நேற்று 21-1-2018 சனிக்கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடான போக்கு வரத்து நீண்ட நேரம் பாதீக்கப்பட்டதோடு, அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகரில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் நகர சபையினால் கொட்டப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த கழிவுப்பொருட்களான குப்பையில் நேற்று சனிக்கிழமை மாலை திடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் எறிய தொடங்கியது.இதனால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நீண்ட நேரமாக பாதீப்படைந்ததோடு,அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மூச்சுத்தினரலுக்கு உள்ளாகியதோடு,பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக அப்பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள், வயோதிபர்கள்,மற்றும் கர்ப்பிணிகள் என அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக பௌசர் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்ட தீ அணைக்கப்பட்டது.
குறித்த குப்பைகளில் காணப்பட்ட இரும்பு பொருட்களை எடுக்க சில சிறுவர்கள் முயற்சி செய்ததாகவும்,இதன் போது அவர்கள் பற்ற வைத்த தீயே குப்பைமேட்டில் பரவியதாக நகர சபை செயலாளர் தெரிவித்தார்.

Reviewed by Author
on
January 21, 2018
Rating:

No comments:
Post a Comment