நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.......
பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிவப் பரம்பொருளை சிலப்பதிகாரம் போற்றுகின்றது.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி செம்பகப் பாண்டியனின் அரண்மனை க்கு வருகிறார்.
அவரின் வருகை ஏழைப் புலவனாகிய தர் மிக்குப் பொற்கிழி பெற்றுக் கொடுப்பது மட்டு மல்ல மாறாக நக்கீரனோடு வாதம் புரிவது மாகும்.
நக்கீரனுக்கும் சிவப்பரம்பொருளுக்கும் வாதம் நடக்கிறது. வாதம் உச்சக்கட்டத்தை அடைந்த போது, தன் நெற்றிக் கண்ணைத் திற ந்து நக்கீரா நான் சொல்வது குற்றமா? என்று விழிக்கிறார் சிவன்.
நெற்றிக் கண் திறந்து வந்திருப்பது சிவன் என்பது உணர்த்தப்பட்டபோதிலும் நக்கீரன் இம்மியும் தளரவில்லை. நெற்றிக்கண் திறப்பி னும் குற்றம் குற்றமே என்று உறுதியாக நிற்கி றார் நக்கீரன்.
உச்சமடைந்த வாதத்தில் சிவனின் நெற்றிக் கண்ணில் நின்று எழுந்த நெருப்புக் கற்றைகள் நக்கீரனை எரிக்கின்றன.
சம்பவத்தை நேரில் கண்ட பாண்டிய மன்ன னும் மற்றுமுளோரும் பதறிச் சிவனைச் சேவி க்க, அஞ்சற்க நக்கீரன் எழுந்து வருவான் என்கிறார் சிவன்.
எரித்த நக்கீரனை சிவன் மீண்டும் எழுகை பெறச் செய்தது ஏன்? அவ்வாறு எழுகை பெறச் செய்வதாக இருந்தால், எரித்தது எதற்காக? என்ற கேள்விகள் எழுகை பெறுகின்றன.
இங்குதான் மிகப்பெரும் தத்துவத்தை சிவப் பரம்பொருள் உணர்த்துகின்றார். பிழை என் றால், குற்றம் என்றால் அதை யார் செய்திருந் தாலும் குற்றமே. இறைவனாக இருந்தாலும் குற்றம் என்றால் குற்றம் என்பதைக் கூறித் தானாக வேண்டும்.
நெற்றிக்கண்ணைத் திறந்து எரிப்பதுபோல வெருட்டுவிட்டாலும் குற்றத்தை குற்றம் என்று சொல் அவ்வாறு சொல்வதால் உனக்கு இழப் பும் மரணமும் ஏற்படுமாக இருந்தால்,
அதனை இறைவன் காப்பாற்றியே ஆக வேண்டும். ஏனெனில் நீவிர் குற்றம் என்று கூறியது உண்மை. அதுவே தர்மம்.
ஆக, தர்மத்தைக் காப்பாற்றிய - உண்மை யைக் கூறிய உன்னை அந்தக் கடவுள் எரித் தால் கூட அவனே உன்னைக் காப்பாற்ற வேண் டும்.
இந்தத் தத்துவத்தை உணர்த்துவதற்கா கவே சிவன் பாண்டிய மன்னனின் அரண் மனைக்கு வந்து நக்கீரனோடு விவாதம் செய் தான்.
இந்தத் தத்துவத்தை பிணை முறியில் ஜனாதிபதி மைத்திரி பின்பற்றுகிறார் போல் தெரிகிறது.
-VALAMPURI-
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.......
Reviewed by Author
on
January 05, 2018
Rating:
No comments:
Post a Comment