பிரித்தானிய சர்வகட்சி குழு கூட்டமைப்பை சந்தித்தது: தொடர்ந்து வடக்கிற்கு விஜயம் -
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர், இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்போது வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து, வடக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறியவுள்ளனர்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர் சந்தித்திருந்தனர்.
இதன்போது, நாட்டின் ஜனநாயக முன்னேற்றம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய சர்வகட்சி குழு கூட்டமைப்பை சந்தித்தது: தொடர்ந்து வடக்கிற்கு விஜயம் -
Reviewed by Author
on
January 05, 2018
Rating:

No comments:
Post a Comment