வட மாகாண ஆளுநரை சந்தித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் -
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் முயற்சி பாராட்டத்தக்கது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இம்மானுவேல் அடிகளாருக்கும், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு மிகவும் நட்புறவாக அமைந்திருந்ததாக இம்மானுவேல் அடிகளார் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், வறுமை நிலைமையிலிருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்களுடன் தமிழ் மொழியில் தொடர்பாடலை மேற்கொள்ளும் ஆளுநரின் முயற்சியானது பாராட்டத்தக்கது எனவும், மேற்படி நடவடிக்கைகளுக்கு அது உதவியாக இருக்கும் எனவும் இம்மானுவேல் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநரை சந்தித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் -
Reviewed by Author
on
January 28, 2018
Rating:
Reviewed by Author
on
January 28, 2018
Rating:


No comments:
Post a Comment