உலகின் மிக வயதான கொரில்லா தனது 60-வது வயதில் மரணமடைந்தது....
அமெரிக்காவில் உள்ள சான் டைகோ மிருகக்காட்சி சாலையில் உலகின் மிக வயதான கொரில்லா குரங்கு தனது 60-வது வயதில் மரணமடைந்தது.
அமெரிக்காவின் சான் டைகோ மிருகக்காட்சி சாலையில் விலா என்ற 60 வயது கொரில்லா குரங்கு வாழ்ந்து வந்தது. 60 வயதான இந்த பெண் குரங்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று விலா மரணமடைந்ததாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக கொரில்லா குரங்குகள் 35 லிருந்து 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால் இந்த குரங்கு அதிக ஆண்டுகள் வாழ்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் காங்கோவில் 1957-ம் ஆண்டு பிறந்த விலா 1959-ம் ஆண்டு மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் 1975 ம் ஆண்டு முதல் சஃபாரி பார்க்கில் வாழ்ந்து வந்தது.
உலகின் மிக வயதான கொரில்லா குரங்கு மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விலாவின் மறைவு தங்களுக்கு பேரிழப்பு என்று அந்த மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகின் மிக வயதான கொரில்லா தனது 60-வது வயதில் மரணமடைந்தது....
Reviewed by Author
on
January 28, 2018
Rating:

No comments:
Post a Comment