உலகில் சூரியன் மறையாத நாடுகளின் பட்டியல் -
நார்வே
இரவில் சூரியன் வந்து தங்கும் இடம் என நார்வே அழைக்கப்படுகிறது. இங்கு சூரியன் மறைவதே கிடையாது. ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக இங்கு வீசுகிறது. குறிப்பாக, அங்குள்ள நார்த் ஆர்டிக் பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும்.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாடு வித்தியாசமான நில அமைப்புகளைக் கொண்டது. எங்கு பார்த்தாலும் அழகிய நீர் வீழ்ச்சிகளும் எரிமலைகளும் பனிப்பாறைகளும் மட்டும் அல்லாமல் ஏராளமான வெந்நீர் ஊற்றுகளையும் கொண்ட அழகிய நாடு. ஐஸ்லாந்தில் நடுராத்திரி சூரிய வெளிச்சத்தில் குதிரைச்சவாரியும் கோல்ஃப் பயிற்சியும் மிகப் பிரபலம்.
கனடா
கனடாவின் வடகிழக்கு மாகாணங்களில், கோடைகாலத்தில் 50 நாட்கள் பகலாகவே இருக்கும். அந்த சமயங்களில் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்றவை நடக்கும்.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் வடக்கு மாகாணங்களில் கலை விழாக்கள் நடக்கும். அதில் வித்தியாசமான விளையாட்டுகளும் போட்டிகளும் இருக்கும்.
சுவீடன்
நீங்கள் எப்போது சுவீடனுக்குச் சென்றாலும், ஸ்டாக்ஹோம் பகுதிகளில், இரவு நேரங்களில் சூரியனை ரசிக்க முடியும். சுவீடனின் தலைநகர் பகுதியில் சூரியன் நடு ராத்திரியில் மறைந்து அதிகாலை 4 மணிக்கு திரும்பவும் உதித்துவிடும்.
குறைந்தது 21 மணிநேரம் அங்கு பகலாகவே இருக்கிறது. ஸ்டாக்ஹோம் 30 சதவீதம் வரை நீர்வழித்தடங்களைக் கொண்டது. இது 14 தீவுகளை உள்ளடக்கியது.
பின்லாந்து
எப்போதும் விளையாட்டும் கொண்டாட்டங்களும் நிறைந்த நாடு பின்லாந்து. இங்கு நடு ராத்திரியின் சூரிய வெளிச்சத்தில் தான், பெரும்பாலான கொண்டாட்டங்கள் அமைந்திருக்கும்.
அங்கு கோடையைக் கழிக்க விரும்பினால் கோடைகாலத்தின் மத்தியில் மே, யூன் மாத நாட்களைத் தெரிவு செய்யலாம். அந்த இரண்டு மாதங்கள் முழுவதுமே சூரியன் மறைவதில்லை. அந்நாட்களில் மக்கள், இரவு நேரங்களில் படகு சவாரி, மீன் பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
உலகில் சூரியன் மறையாத நாடுகளின் பட்டியல் -
Reviewed by Author
on
January 22, 2018
Rating:
No comments:
Post a Comment