தமிழ் மக்களுக்காகவே நாம் பொறுமையுடன் உள்ளோம் - சித்தார்த்தன்
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்க ளில் அரசு மெத்தனமாக இருந்தா லும் தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட்அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்@ராட்சிமன்ற தேர் தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது. அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிரா கரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும்
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி யாக வருவதற்கு 80 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அரசினால் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச அபிவிரு த்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்ப ட்டிருக்கவில்லை. வரவுசெலவு திட்டத்திற்கு வாக்களிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பின ர்களுக்கு ஒதுக்கபட்ட நிதிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்பதுடன் வன்னி மக்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அந்த ந்த மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்க ப்படும் நிதியானது மாவட்ட அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது அனை வருக்கும் தெரியும். இதனைத் திரித்து சிலர் பொய்யாக பரப்புரை செய்கின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த காலத்தில் அரசிடமிருந்து பிர த்தியேகமாக நிதியை பெற்று அபிவிருத்தி வேலைகளை செய்திருந்தார் என மேலும் கூறினார்.
தமிழ் மக்களுக்காகவே நாம் பொறுமையுடன் உள்ளோம் - சித்தார்த்தன்
Reviewed by Author
on
January 24, 2018
Rating:
Reviewed by Author
on
January 24, 2018
Rating:


No comments:
Post a Comment