உலக நாடுகளுடன் இணைந்த தமிழீழம்! -
உலக காற்பந்தாட்ட அணிகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினை தமிழீழ ஈழ அணி ஒன்று பெற்றுள்ளது.
ConIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டித்தொடரில் தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி ஒன்று விளையாடி வருகின்றது.இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் எல்லாளன் வன்னின் என்ற தமிழீழ காற்பந்தாட்ட அணி போட்டியிட்டுள்ளது.
லண்டனில் உள்ள சோமாலியா புலம்பெயர்ந்தோர் அணியான Barawaவுக்கும், கனடா, லண்டன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை கொண்ட தமிழீழ அணியும் போட்டியிட்டுள்ளது.
இந்தப் போட்டி இன்று வடக்கு சைப்ரசில் நடைபெற்றுள்ளது.. எனினும் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் லண்டனில் காற்பந்தாட்ட போட்டித் தொடர் ஒன்று நடைபெறவுள்ளது. இதிலும் ஈழ காற்பந்தாட்ட அணி பங்கேற்கவுள்ளது.
உலக நாடுகளுடன் இணைந்த தமிழீழம்! -
Reviewed by Author
on
January 07, 2018
Rating:
Reviewed by Author
on
January 07, 2018
Rating:


No comments:
Post a Comment