323,000 டொலருக்கு ஏலம் போன பாரிய ப்ளூஃபின் டுனா மீன் -
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள பாரம்பரிய மீன் சந்தையான Tsukiji-ல் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
சுமார் 890 பவுண்டுகள் எடை கொண்ட பாரிய ப்ளூஃபின் டுனா மீனை டோக்கியோவில் சுஷி உணவகங்கள் பலவற்றை நடத்தி வரும் பிரபல உணவக உரிமையாளர் Kiyoshi Kimura ஏலத்தில் வாங்கியுள்ளார்.
புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற சிறப்பு சந்தையில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. இதிலேயே குறித்த உணவக உரிமையாளர் பாரிய தொகைக்கு ப்ளூஃபின் டுனா மீனை வாங்கியுள்ளார்.
பசிபிக் கடலில்தான் இந்த ப்ளூஃபின் டுனா மீன் அதிக அளவில் கிடைக்கும். அதிக விலைகொடுத்து மீன் வாங்கிய உணவகத்தின் உரிமையாளரை பற்றிய செய்திகள் ஜப்பானிய சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகியுள்ளது.
இந்த மீனை ஜப்பனிய மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கி வருகின்றனர். மேலும் ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பாரம்பரியம் மிக்க இந்த மீன்மார்கெட்டை பார்க்காமல் செல்லமாடார்கள்.
ஜப்பனிய சிறப்புகளில் 80 ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் இந்த மீன்மார்கெட்டும் ஒன்று.
ஆனால் 2020 நடக்கும் ஒலிம்ப் போட்டிக்காக இந்த மின் மார்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
323,000 டொலருக்கு ஏலம் போன பாரிய ப்ளூஃபின் டுனா மீன் -
Reviewed by Author
on
January 07, 2018
Rating:
No comments:
Post a Comment