அண்மைய செய்திகள்

recent
-

2000 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மூடப்பட்டது -


கிட்டத்தட்ட உலகின் பாதி மக்களின் கடவுளாக வணங்கப்பட்டு வரும் இயேசு கிறுஸ்துவின் உயிர் பிறிந்த இடத்தில் உள்ள தேவாலயம் வரி பிரச்சனையால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயேசு கிறிஸ்து யூதாஸ் என்னும் சீடரால் காட்டிக் கொடுக்கப்பட்டு தற்போதைய ஜெருசலேம் நகரில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் அவர் உயிர் பிரிந்த இந்த இடத்தில் கட்டப்பட்ட தேவாலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இந்த இடத்தில் இருந்துதான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு சென்றதாக நம்பப்படுவதால் இந்த தேவாலயம் கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான புனிதத்தலமாக உள்ளது.

ஜெருசலேமில் உள்ள இந்த தேவாலயத்துக்கு ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்த புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வழிப்பாட்டுத்தலம் மூடப்பட்டதாக தேவாலய நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் எப்போது திறக்கும்? இந்த தேவாலயம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்? என்பது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை

2000 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மூடப்பட்டது - Reviewed by Author on February 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.