புகலிடம் கோரி 2200 இலங்கையர்கள் விண்ணப்பம்! -
2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 8,727 பேர் அதிகரித்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பிலிப்பைன்ஸில் இருந்து அதிகளவானவர்கள் விண்ணப்பத்துள்ளனர்.
இதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 4895 பேரும், வியட்நாமை சேர்ந்தவர்கள் 3,116 பேரும், இலங்கையர்கள் 2,226 பேரும் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் 10 நாடுகளிலிருந்து விண்ணப்பதாரர்களிடையே, அகதிகளாக யாரும் அங்கீகரிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடம் கோரி 2200 இலங்கையர்கள் விண்ணப்பம்! -
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment