தீர்வில்லை! ஒரு வருடத்தை தொடுகின்றது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் -
கிளிநொச்சியில் கடந்த வருடம் மார்ச் 20ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஒரு வருடத்தை எட்டவுள்ளது.
எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்து வரும் போராட்டம் 360ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்குகொண்டு வரப்பட்ட பின்னரும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டமானது எதிர்வரும் 19ஆம் திகதி ஒரு வருடத்தை எட்டவுள்ள நிலையில், எவ்வித தீர்வுகளும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்வில்லை! ஒரு வருடத்தை தொடுகின்றது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் -
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment