சிந்துவெளி நாகரிகமும் தமிழரும் நூலின் வெளியீட்டு நிகழ்வு -
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் மு.கணேசராசா தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழர்களின் தோற்றுவாயின் ஆரம்ப நாகரிக நகரமாக கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் முதல்முறையாக ஆய்வுசெய்யப்பட்டு நூலாக இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு குறுமண்வெளியை சேர்ந்த ஓய்வுபெற்ற பிரதி அதிபர் க.பரராஜசிங்கம் என்பவர் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக ஆய்வுசெய்து 'சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்'என்னும் நூலை வெளியிட்டு வைத்துள்ளார்.
மேலும், நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் வே.விவேகானந்தராசா மற்றும் பேராசிரியர்களான மா.செல்வராசா,அம்மன்கிளி முருகதாஸ், செ.யோகராஜா, எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சிந்துவெளி நாகரிகமும் தமிழரும் நூலின் வெளியீட்டு நிகழ்வு -
Reviewed by Author
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment