தேங்காய் என்ற பெயர் இப்படிதான் வந்ததா? -
தென்னை மரத்திலிருந்து விளைவதால், அதைத் தென்னங்காய் என்று சொல்வதில்லை. தேங்காய் என்றே சொல்கிறோம்.
தேங்காய் என்ற சொல் எப்படி உருவாயிருக்கும் என்று யோசித்தது உண்டா?
தென்னை மரத்திற்குத் “தெங்கு” என்று ஒரு பெயருண்டு. தெங்கு என்பது தென்னை மரத்தைக் குறிக்கிறதாகும்.
இந்தத் தெங்கு என்பதுதான், தேங்காய் என்ற சொல் தோன்றுவதற்கு வேராக விளங்குகிறது.
''தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்” என்னும் நன்னூலில் கூட தேங்காய் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
தெங்கு நீண்டு = தெங்கு என்பதில் ஈற்று உயிர்மெய் கெட்டு மீதமிருக்கும் தெங் என்பது நீண்டுவிடும். தெங் என்பதன் முதலெழுத்து தெ என்னும் குறில் நீண்டு தேங் என்று நெடிலாகும்.
தேங் என்பதுடன் காய் சேர்ந்து தேங்காய் என்று ஆனது.
தெங்கு + காய் => தெங்(கு) + காய் => தேங் + காய் => தேங்காய்
தேங்காய் பழுப்பதில்லை ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள்.
அதனைத் “தெங்கம்பழம்” என்று கூறுவதுமுண்டு. 'நாய் உருட்டிய தெங்கம்பழம்போல” என்ற பழமொழியும் உண்டு.
தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது என்பது கூடுதல் தகவலாகும்.
தேங்காய் என்ற பெயர் இப்படிதான் வந்ததா? -
Reviewed by Author
on
February 07, 2018
Rating:
Reviewed by Author
on
February 07, 2018
Rating:


No comments:
Post a Comment