பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! -
25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் - 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிப்புரியும் 34 வயதுடைய நபர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை மற்றும் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! -
Reviewed by Author
on
February 06, 2018
Rating:
Reviewed by Author
on
February 06, 2018
Rating:


No comments:
Post a Comment