அண்மைய செய்திகள்

recent
-

ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பள்ளி மாணவர் -


புளோரிடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான Peter Wang என்னும் மாணவரின் உடல் ஒரு ராணுவ வீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Reserve Officers' Training Corps என்னும் அமைப்பின் சீருடையில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி அமெரிக்க கொடியால் மூடப்பட்டு சுமந்து வரப்பட்டது.
அவருக்கு Army Medal of Heroism என்னும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது, அவரது அடக்கத்தின் முடிவில் வெள்ளைப்புறாக்கள் பறக்க விடப்பட்டன.

Peter Wang, உயர் கல்வி முடித்ததும் ஒரு ராணுவ வீரராக முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“கடமை, கௌரவம் மற்றும் நாடு ஆகியவற்றின் மதிப்புகளுக்காக தன்னையேஅர்ப்பணிக்கும் குணம் கொண்ட தலைவர்களை உருவாக்குவது United States Military Academyயின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகும்.
பிப்ரவரி 14 அன்று, Peter Wang மேற்கொண்ட செயல்பாடுகள் அந்தக் கொள்கைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.
அவரை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு ராணுவ வகுப்பில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது” என்று United States Military Academy தெரிவித்துள்ளது.
ஒரு பள்ளி மாணவருக்கு ஏன் இத்தனை மரியாதை?
இந்தக் கேள்விக்கான பதில், Peter Wang, பிப்ரவரி 14 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது தன் உயிரை பெரிதாக மதிக்காமல் பல மாணவர்கள் வகுப்பறைக்குள் ஒளிந்து கொள்வதற்கு வசதியாக கதைவைத் திறந்து பிடித்துக் கொண்டு நின்றார். இச்சம்பவத்தில் பலர் அவரால் காப்பாற்றப்பட, அவரோ துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்.
அவரது இந்த தியாகத்திற்கும் வீரத்திற்கும் மதிப்பளிக்கும் வகையிலேயே Peter Wangக்கு இந்த ராணுவ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹீரோ போன்று அடக்கம் செய்யப்பட்ட Peter Wangஇன் அடக்கத்தில் பங்குகொண்ட அவரது தாயார் துக்கம் தாளாமல் கதறி அழுததும் அவரை மற்றவர்கள் கைத்தாங்கலாக அழைத்து சென்றதும் காண்போரை கலங்கச் செய்தது.





ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பள்ளி மாணவர் - Reviewed by Author on February 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.