ஸ்ரீதேவியை பார்க்க தான் முடியல..இந்த வாய்ப்பாச்சும் கிடைச்சுச்சே: நடிகர் செந்தில் உருக்கம் -
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு திரையுலகினர் உட்பட பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான செந்தில் நடிகை ஸ்ரீதேவி மாதிரி ஒருவர் இனிமேல் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஸ்ரீதேவி நடித்துள்ள படங்களை பார்த்து தான் தற்போது உள்ள நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். ஒரே ஒரு முறை அவர்களை விமான நிலையத்தில் பாத்திருக்கேனே தவிர, இதுவரை அவருடன் படங்கள்ல நடிக்கிறதுக்கான வாய்ப்பும், நேரில் சந்தித்து பேசுறதுக்கான, பார்ப்பதற்கான வாய்ப்பும் எனக்கும் கிடைக்கவில்லை.
இருந்த போதும், அவர் புகைப்படத்தை வைத்து ஒரு காமெடி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.
அவர் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று அவங்க குடும்பத்தாருக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்வதுடன் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் செந்தில் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை காண்பித்து இது தான் என் தங்கை என்று சொல்லி கவுண்டமணியை ஏமாற்றி, கருப்பாக இருக்கும் பெண் ஒருவரை அவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார். அதையே செந்தில் தற்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவியை பார்க்க தான் முடியல..இந்த வாய்ப்பாச்சும் கிடைச்சுச்சே: நடிகர் செந்தில் உருக்கம் -
Reviewed by Author
on
February 26, 2018
Rating:
No comments:
Post a Comment