சிவனுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்த பெண் -
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள நுனேரா கிராமத்தில் உள்ள சத்தீஸ்கர் சிவன் கோவில் நேற்று முன்தினம் காலை 28 வயதுள்ள சீமா பாய் எனும் இளம்பெண் ஒருவர், தனது கணவர் ராம் கோண்ட் உடன் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.
சிவலிங்கத்தின் முன் நின்று தனது பிரார்த்தனையை முடித்த அவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது நாக்கை அறுத்துள்ளார்.
இதனைக் கண்டு அங்கிருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவியின் செயலால் பதறிப் போன கோண்ட் உடனடியாக தனது மனைவியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வேண்டுதல் காரணமாக சீமா இத்தகைய விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சிவனுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்த பெண் -
Reviewed by Author
on
February 16, 2018
Rating:

No comments:
Post a Comment