வவுனியா நகரசபையின் தலைவராக நாகலிங்கம் சேனாதிராஜா -
இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான சந்திப்பின்போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன் நிமிர்த்தம் வவுனியா நகரசபைக்கு தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜாவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய போதனாசிரியரான தர்மலிங்கம் பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நகரசபையின் உபதலைவராக சந்திரகுலங்களம் மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வவுனியாவில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேசசபை தவிர்ந்த 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் மற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் பெயர் விபரங்கள் ஊடகங்களுககு அறிவிக்கப்படும் போது புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்,
டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் தலைவராக நாகலிங்கம் சேனாதிராஜா -
Reviewed by Author
on
February 16, 2018
Rating:

No comments:
Post a Comment