அண்மைய செய்திகள்

recent
-

ஜெனிவா 37 வது அமர்வும், தமிழீழ இன அழிப்பும்! -


தற்போது ஜெனிவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை சபையின் 37வது கூட்ட தொடரில் இலங்கைத் தீவில் தமிழீழ மக்களின் இன அழிப்பு விடயமாக நேற்று பல கூட்டங்கள் இடம்பெற்றன.
இதன் முதலாவது கூட்டம் ராடோ எனும் ஆபிரிக்கா அமைப்பினால் உலகில் மரண தண்டைகள் என்ற தீர்ப்பில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை போன்ற நாடுகளின் நிலைமைகள் ஆராயப்பட்டன.
கூட்டத்தில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி கிருபாகரன், இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்படும் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட மரணதண்டனைகள் பற்றி உரையாற்றினர்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், “ஓர் நாட்டில் மரணதண்டை என்பது இருமுறைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் ஒன்று அரசுகளினால் பாதுகாப்பு பிரிவுகள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு ஆயிரக்கணக்கான தமிழர் பலியாகியுள்ளதாகவும் கூறினார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து பயமுறுத்தப்படுவோருக்கான அமைப்பு மூலம் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இரணைத்தீவை பிறப்பிடமாக கொண்ட மேரி அவர்கள் உறையாற்றினார்.
இவர் இரணைத்தீவு மக்கள், கடந்த 29 வருடங்கள் தமது பிறப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழ்வதாகவும், தமது தார்மீக பூமியை படையினரிடம் பறிகொடுத்துடன், தமது பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது நிலம் தமக்கு மீண்டும் கையளிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டம் காணாமால் போயுள்ள தமிழீழ மக்கள் சம்பந்தமாக நடைபெற்றது.
இதனை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஒருங்கிணைப்புடன் சுவிஸ்லாந்து, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காணாமால் போயுள்ளோர்களின் உறவினர், சகோதர்கள், மனைவிமார் கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து வருகை தந்து உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய லீலாதேவி, அரிய மலர், ஜெயகுமாரி, சந்தியா எக்னலிய கொட போன்றோர்களின் உரை அங்கு வருகை தந்தோரின் மனது நெகிழ வைத்தது.

இவர்களது உரை, உடை, நடை பாவைனை இவர்களது நீண்டகால சோகங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலித்ததுடன், ஐ.நா மனித உரிமை சபையில் இதுவே முதல் தடவையாக தமிழீழ மக்களது காணாமல் போனோர் விடயம் இங்கு முக்கியத்துவம் பெற்றது.
இவர்களது செயற்பாடுகளை வவுனியாவிலிருந்து வருகை தந்த சிங்கம் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார்.
இந்த கூட்ட தொடரில் இன்னும் இது போன்ற பல கூட்டங்கள் நடைபெறவிருப்பதுடன், வடக்கு கிழக்கிலிருந்து பல அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவுள்ளனர்.

காணாமால்போன்னோர் பற்றி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு பலதடைவை விஜயம் செய்துள்ள ஐ.நா பிரதிநிதி பாபிலோ கீறிவ் முக்கிய உறையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா 37 வது அமர்வும், தமிழீழ இன அழிப்பும்! - Reviewed by Author on March 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.