அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு -


மட்டக்களப்பு - வவுணதீவில் வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று வவுணதீவு பொதுக் கட்டட மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

ஊடகவியலாளர்களும், வவுணதீவு மக்கள் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் திகதி கரடியனாற்றில் முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வவுணதீவு பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள், மக்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்துச் செய்திகளையும் பத்திரிகைவாயிலாக வெளிக்கொண்டு வந்தவராவார்.
தனது எழுத்தின் மூலம் கீழ் மட்டத்திலுள்ள மக்களையும், கிராமங்களையும் உயர்த்தும் வண்ணம் அரசாங்கத்திற்கு சில விடயங்களை சுட்டிக்காட்டியவாறே தனது ஊடகப் பயணத்தை தொடர்ந்தவராவார்.
அந்த காலகட்டத்தில் பல சம்பவங்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் துணிச்சலுடனும் துடிப்புடனும் எழுதுவதில் ஊடகவியலாளர் இரத்தினசிங்கம் முன்னிலையில் செயற்பட்டவராவார்.
ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு - Reviewed by Author on March 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.