இலங்கை தமிழ் குடும்பத்திற்காக பெருந்தொகையில் ஒன்று திரண்ட வெளிநாட்டவர்கள்! -
தமிழ் குடும்பத்தின் நாடு கடத்தலுக்கு எதிராக மெல்போர்னில் உள்ள உள்நாட்டலுவல்கள் அலுவலகம் திணைக்களத்திற்கு முன்னால் மாணவர்கள் குழுவொன்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம் அவரது பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த வாரம் Biloela, Queensland பகுதியில் இருந்து வெளியேற்றி, மெல்போர்ன் தடுப்பு மையத்தில் தங்க வைப்பதற்கு எல்லை படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர்களது விசா காலம் நிறைவடைந்தமையே இந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.
குறித்த நான்கு பேரும் விமானத்தில் ஏற்றப்பட்ட போதும், இறுதி நேரத்தில் நாடுகடத்தல் தவிர்க்கப்பட்டு. விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
அதற்கமைய நாடு கடத்தப்படவிருந்த குறித்த குடும்பத்தின் நாடு கடத்தல் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டு தற்காலிமாக அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர்களின் வீடு அமைந்துள்ள Biloela, Queensland பகுதிக்கு அவர்களை மீளவும் அழைத்து வருமாறு குறிப்பிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக இதுவரையில் 85000 அவுஸ்திரேலியார்கள் மனு ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர்.
இலங்கை தமிழ் குடும்பத்திற்காக பெருந்தொகையில் ஒன்று திரண்ட வெளிநாட்டவர்கள்! -
Reviewed by Author
on
March 17, 2018
Rating:

No comments:
Post a Comment