மன்னாரில் உள்ள சுற்றுலா தலம்....தொங்கி கொண்டு இருக்கும் தொங்குபாலம்......வறண்டு கிடக்கும் தேக்கம்...அதிகாரிகள் தூக்கம்.video
பலவகையான மட்டத்தில் துரித கதியில் நடைபெற்று வருகின்றது மகிழ்ச்சிக்குரியது தான் ஆனாலும் இன்னும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியவை எனும் போது….
- 1. மன்னார் சென் ஜோர்ச் கோட்டை
- 2. பெருக்க மரம்-பள்ளிமுனை
- 3. தொங்கு பாலம்-குஞ்சுக்குளம்
- 4. தேக்கம் அணைக்கட்டு-குஞ்சுக்குளம்
- 5. மடுக்கோவில்-மடு
- 6. திருக்கேதீஸ்வரம்-மாதோட்டம்
- 7. மினரா வெளிச்சவீடு-தலைமன்னார்
- 8. சமாதானப்பாலம்-மன்னார்
- 9. அல்லிராணிக்கோட்டை-முத்தரிப்புதுறை
- 10. சல்லிக்கடற்கரை-விடத்தல்தீவு
- 11. பௌத்தவிகாரை-சாந்திபுரம்
- 12. கபுறடி(40அடி)காட்டுப்பள்ளி(மூன்று இடங்களில்)
- 13. ஆதாம் பாலம்(தீடைகள்)
இவற்றுடன் இன்னும் மன்னாரில் உள்ள
- கட்டுக்கரைக்குளம்
- கடற்கரைகள்அழகானவை
- வங்காலை பறவைகள் சரணாலயம்
- மன்னார் பறவைகள் சரணாலயம்
- வேதசாட்சி ஆலயம்-தோட்டவெளி
- புனித லூசிய ஆலயம்-பள்ளிமுனை
- புனித செபஸ்தியார் பேராலயம்-மன்னார்
- எருக்கலம்பிட்டி பள்ளிவாசல்
- பாலாவித்தீர்த்தக்கரை-திருக்கேதீஸ்வரம்
- முத்துக்குளிப்பு-முத்தரிப்புத்துறை
- டோரிக்கோட்டை-அரிப்பு
- சல்லிக்கடற்கரை-விடத்தல்தீவு
- (வடக்குமாகாண சுற்ற்லாத்தலங்கள் நூலில்)பழமையான ஆலயங்கள்-கோவில்கள் பள்ளிவாசல்கள் விகாரைகள் இன்னும் ஏராளமானவை உள்ளன எமக்கு தெரிந்தவை இவ்வளவுதான் இன்னும் அழிந்ததும் அழிந்து கொண்டிருப்பதும் அறியாமல் இருக்கின்றோம் ஆம் இங்கே சொல்லவருவது என்னவென்றால்
மன்னார் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வரிசையில் உள்ளவை எவரும் வந்து போகும் இடம் மன்னாரில் உள்ளவர்கள் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் நிறைய சுற்றுலாப்பயணிகள் வந்துபோகின்றார்கள் அவர்களுக்கு ஏற்றால் போல் மன்னாரில் உள்ள சுற்றுலாத்தளங்கள் நல்ல முறையில் பார்த்து ரசிப்பதற்கு ஏற்றவாறு உள்ளதா…. ஏன்றால்….?
குஞ்சுக்குளத்தில் அமைந்துள்ள தொங்குபாலம் தேக்கம் அணைக்கட்டு இரண்டும் ஒருகிலோ மீற்றர் இடைவெளியில் தான் உள்ளது இரண்டுமே அழகானவை மழைகாலத்தில் சென்று பார்ப்போமானால் பசுமையாக நீரின் சலசலப்பு மிகவும் அழகாக காட்சியளிக்கும் அருமையான இடம் இது எமது மன்னாரில் உள்ளதா என்ற சந்தேகமே வரும்….
1938ம் ஆண்டு அருவியாற்றைக்கடந்து பெரியகுஞ்சுக்குளம் பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களை கடந்து செல்வதற்காக வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியில் அடர்ந்த காட்டில் உள்ள குஞ்சுக்குளத்தின் இப்பாலம் கட்டப்பட்டது.
- தொங்குபாலத்திற்கு-45.0கிலோ மீற்றர் தூரம்
- தேக்கம் அணைக்கட்டு-46.0கிலோ மீற்றர் தூரம்
ஆம் அருகில் சென்றுபார்த்தால் மன்னாரில் தான் உள்ளது என்பது நிஜம்தான் ஆகும் காரணம் அந்த அழகிய பாலம் மக்கள் பார்வைக்குமட்டும் தான் அழகாய் உள்ளது அதில் ஆசைக்கு ஏறிச்;செல்வது ஆபத்தானதுதான் என்கின்ற உணர்வை அந்தப்பாலத்தில் அடிப்பகுதியில் உள்ள தகரங்கள் கழன்றும் அதில் பூட்டியிருக்கும் நட்டுக்கள் பொறுப்பாகவுள்ள சைற்கம்பிகள் உக்கியும் உடைந்தும் காணப்படுகின்றது.
- பாதுகாப்பானதாக இல்லை…..
- மக்கள் பாவனைக்கு உகந்ததாக இருக்கின்றதா….
- அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்களா….
- இப்படியே அழியவிடப்போகின்றோமா….
- எம்மை தேடி ஏனைய மாவட்டங்களில் இருந்து வரும் நண்பர்கள் உறவினர்கள் சுற்றிக்காட்ட முனையும் போது எதை முதலில் காட்டுவது எப்போது கொண்டு போய் காட்டுவது என்று குழப்பம் மழைகாலம் என்றால் பறவாயில்லை சில, இடங்கள் அழகாய் இருக்கும் (தொங்குபாலம்-தேக்கம்) இன்னும் பல இதுவே வெயில்காலம் என்றால் சொல்ல தேவையில்லை.....
என்னதான் செய்யப்போகின்றோம்(கடந்த காலப்பகுதியில் புதிய தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது)
- இந்தப்பகுதியல் மலசலகூட வசதியில்லை(காடுதான் அதனை பயன்படுத்த முடியுமா சிறுவர்கள் பெண்கள்)
- சிறந்த தங்கும் இடம் வசதியில்லை(மழை-வெயில் நேரங்களில்)
- குப்பைகள் கழிவுகள் அகற்றி சுத்தமான பிரதேசமாக மாற்றியமைத்தல்
- தொங்குபாலத்தின் தாங்கும் கம்பிகள் மற்றும் தகரங்கள் மாற்றுதலுடன் வர்ணம் பூசுதல் சிறப்பானது.
- தவறான செயற்பாடுகளை தடுத்தல்(மது அருந்துதல்-காடழித்தல்)
- புதிதாக செய்வதோடு இருப்பதை பாதுகாப்போம்.
அனைத்து சுற்றுலாப்பயணிகளும் எந்தவிதப்பயமும் இன்றி சந்தோஷமாக வந்து செல்லக்கூடிய வகையில் அமைத்துக்கொள்ளவேண்டியது. பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் தலையான கடமையாகும் பழைமையான எமது இடங்களையும் வளங்களையும் பாதுகாத்தல் வளப்படுத்தல் என்பது மன்னார் மண்ணின் ஒவ்வொரு மைந்தர்களினதும் கடமையாகும்…
மன்னாரில் உள்ளவர்கள்(மாணவர்கள் மக்கள் அனைவரும்) முதலில் மன்னாரில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்வையிட வேண்டும்
மன்னாரின் எழுச்சியை விரும்பும் ஒருவன்
-வை.கஜேந்திரன்-



மன்னாரில் உள்ள சுற்றுலா தலம்....தொங்கி கொண்டு இருக்கும் தொங்குபாலம்......வறண்டு கிடக்கும் தேக்கம்...அதிகாரிகள் தூக்கம்.video
Reviewed by Author
on
March 17, 2018
Rating:

No comments:
Post a Comment