உலகிலேயே மிகவும் வேகமாக செல்லக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை -
இந்த பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும்.
சுமார் 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகனையில் உள்ளது
இந்த ஏவுகனையை இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனைச் செய்யப்பட்டது. அப்போது இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத்துல்லியமாக தாக்கி அழித்தது.
இதன் மூலம் ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் வல்லமை உள்ளதால் உலகிலேயே மிகவும் வேகமாக செல்லக்கூடிய க்ரூஸ் ஏவுகனை எனும் பெருமையை பிரமோஸ் ஏவுகணை பெற்றுள்ளது.
இந்த சோதனை வெற்றி பெற்ற பின்னர் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருக்கு இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருக்கு வாழ்த்துக்கள் என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
Formidable Supersonic Cruise Missile #BrahMos was successfully flight tested at 8:42 AM today at Pokhran test range, Rajasthan.— Raksha Mantri (@DefenceMinIndia) March 22, 2018
The precision strike weapon with Indian-made seeker flew in its designated trajectory and hit the target with pin-point accuracy.@PIB_India @MIB_India
இந்தியாவில் பாயக்கூடிய பிரம்ம புத்திரா, ரஷ்யாவில் பாயக்கூடிய மோஸ்வாக் நதிகளின் பெயரை இணைத்து பிரமோஸ் என்று இந்த ஏவுகணைக்கு பெயாிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகவும் வேகமாக செல்லக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை -
Reviewed by Author
on
March 23, 2018
Rating:

No comments:
Post a Comment