விஜய்க்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறது! இளம் நடிகை ரியல் எக்ஸ்பிரஸன் -
விஜய்க்கு பல இளம் பெண்கள் ரசிகைகளாக இருக்கிறார்கள். அவரின் படங்களில் துப்பாக்கி பலருக்கும் பிடித்த ஒன்று. முருகதாஸ் இயக்கத்தில் வந்த இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்களில் சஞ்சனாவும் ஒருவர்.
சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் துப்பாக்கி பட அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். அவருக்கு விஜய்க்கு தங்கையாக நடிக்கப்போகிறோம் என தெரிந்ததும் சந்தோசப்பட்டு ஓகே சொல்லிவிட்டாராம்.
விஜய் சார் பேசமாட்டார் என சொல்கிறார்கள். அவர் அப்படியெல்லாம் கிடையாது. முதல் நாள் அவரே வந்து என்னிடம் நான் தான் விஜய் என தன்னை அறிமுகப்படுத்தி பேசினார்.
நான் உங்களை தெரியாமல் இருக்குமா சார் என சொன்னேன். மேலும் முதல் நாள் ஷூட்டிங்கே விஜய்க்கு காரில் பெண் பார்க்க செல்வார்கள் அல்லவா. அதுதான் நடந்தது.
அது மட்டுமல்ல என்னை ஒரு தங்கச்சி போலவே தான் நடத்தினார். அவர் பைக் நன்றாக ஓட்டுவார். படத்தில் ஒரு பைக் சீன் வரும். அப்போது என் அம்மா பயந்தார். அவருக்கு பைக் என்றால் பயம்.
ஆனால் என் அம்மாவை விளையாட்டாக பயமுறுத்துவதற்காக விஜய் சார் என்னை கீழே விழவைப்பது போல ஸ்டண்ட் செய்தார். உண்மையில் அவருக்கு நன்றாக பைக் ஓட்ட தெரியும்.
நேரம் தவறாமை அவரிடம் எனக்கு பிடித்த குணம் என சஞ்சனா தன் மறக்கமுடியாத அனுபவத்தை கூறினார்.
விஜய்க்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறது! இளம் நடிகை ரியல் எக்ஸ்பிரஸன் -
Reviewed by Author
on
March 23, 2018
Rating:

No comments:
Post a Comment