அண்மைய செய்திகள்

recent
-

நிலவில் செல்போன் டவர்: அறிவியலின் அசுர வளர்ச்சி -


அறிவியல் வரலாற்றில் முதல் முறையாக, நிலாவில் Mobile network வசதி ஏற்படுத்தும் வகையில், செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளது.
Vodafone, Nokia, Audi ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, நிலவில் செல்போன் டவர் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலவின் மேற்பரப்பை பூமியில் இருப்பவர்கள் கண்டுகளிக்க வசதியாக, அதனை உயர்தர Pixel-யில் Live ஆக காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில், Hardware ஒன்றை Nokia நிறுவனம் தயார் செய்ய உள்ளது.
இந்தத் திட்டத்தினை, பெர்லினை சேர்ந்த பிடி அறிவியலாளர்கள் குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான முயற்சியை, 2019ஆம் ஆண்டில் ‘Space X Falcon 9' ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்படும் என Vodafone தெரிவித்துள்ளது.



நிலவில் செல்போன் டவர்: அறிவியலின் அசுர வளர்ச்சி - Reviewed by Author on March 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.