சீனாவின் நிரந்தர ஜனாதிபதியாகும் ஜி ஜின்பிங் -
சீனா நாட்டின் சட்டப்படி, ஒருவர் இருமுறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். ஆனால், இந்த நிபந்தனையில் இன்று திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
சீனாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்பது சீன அரசியல் விதியாகும். இந்த விதியை நீக்க, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
இதற்கான தீர்மானத்திற்கு சுமார் 3,000 பிரதிநிதிகள் ஆதரவு அளித்துள்ளனர். அவ்வாறு சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டால், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்(64), தனது பதவிக்காலம்(2023) முடிந்தும் ஜனாதிபதியாக தொடருவார் என்று கூறுப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் நிரந்தர ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் இருப்பது சிறந்தது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிரந்தர ஜனாதிபதியாகும் ஜி ஜின்பிங் -
Reviewed by Author
on
March 06, 2018
Rating:
No comments:
Post a Comment