அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீதேவியை கௌரவித்த ஆஸ்கர் விருது.. உலகையே எதிர்பார்க்காத சோகம் -


சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 4-ல் நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் ’த ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்கார் விருது விழாவில் மறைந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு இரங்கள் தெரிவிக்கும் விதமாக அஞ்சலி செலுத்தப்படும். அதில் சமீபத்தில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியை கௌரவிக்கும் தருணமாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மறைந்த இந்தி நடிகர் சசிகபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜேம்ஸ்பாண்டு ரோஜர் மோர், மேரி கோல்ட் பெர்க், ஜான் ஜான்சன், ஜான் கியார்டு, சாம்ஷெப்பர்டு ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீதேவியை கௌரவித்த ஆஸ்கர் விருது.. உலகையே எதிர்பார்க்காத சோகம் - Reviewed by Author on March 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.