பூமியின் படங்களை எடுத்து அனுப்பிய நானோ செயற்கைக்கோள் -
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, PSLV-C40 என்ற ராக்கெட் மூலமாக INS-1C எனும் சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள கமிரா, கடந்த ஜனவரி 16ஆம் திகதி முதல் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் INS-1C எடுத்து அனுப்பிய பூமி பரப்பின் புகைப்படங்களை, இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, நிலப்பரப்பில் காடுகள், வாழ்விடங்கள், விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்து துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
INS-1C செயற்கைக்கோள், இந்திய நானோ செயற்கைக்கோள் தொடரில் மூன்றாவது செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியின் படங்களை எடுத்து அனுப்பிய நானோ செயற்கைக்கோள் -
Reviewed by Author
on
March 23, 2018
Rating:
No comments:
Post a Comment