முடி உதிர்வுக்கு முடிவு கட்ட வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க -
முடி உதிர்தலுக்கு என்ன காரணம் என்று பார்த்தால் நாம் உண்ணும் உணவில் தொடங்கி, வெயில் செல்வது என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருப்பது மாதிரியே, அதை போக்கும் காரணிகளும் ஏராளம் உள்ளனர். இயற்கையான வழியில் முடி உதிர்வதை போக்கும் சில வழிகளைப் பார்ப்போம்.
- பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அந்த சாறை தலை முடியில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு அலச வேண்டும்.
- வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
- தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
- தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
- இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்த சாறை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
- கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது அறவே நிற்கும்.
முடி உதிர்வுக்கு முடிவு கட்ட வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க -
Reviewed by Author
on
March 23, 2018
Rating:
Reviewed by Author
on
March 23, 2018
Rating:


No comments:
Post a Comment