அண்மைய செய்திகள்

recent
-

முதன் முறையாக வெளியானது பிரித்தானியா இளவரசரின் திருமண அழைப்பிதழ் -


பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமண அழைப்பிதல் தொடர்பான புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் அவர்களது திருமணம் வரும் மே மாதம் 19-ஆம் திகதி St George's தேவலாயத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின் இவர்கள் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் Kensington அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இவர்களின் திருமண அழைப்பிதழ் தொடர்பான புகைப்படத்தை முதல் முறையாக பதிவேற்றம் செய்துள்ளது.
இந்த திருமண அழைப்பிதழை லண்டனில் இருக்கும் Barnard Westwood என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. Windsor Castle-ல் உள்ள St George’s தேவாலயத்தில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு சுமார் 600 பேருக்கு இந்த அழைப்பிதழ் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி திருமணத்தின் மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வெள்ளை நிற அட்டை கொண்ட திருமண அழைப்பிதழில் அமெரிக்கன் மை பயன்படுத்தப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அனைத்தும் இத்தாலி வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக வெளியானது பிரித்தானியா இளவரசரின் திருமண அழைப்பிதழ் - Reviewed by Author on March 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.